மியன்மார் ரோஹிங்கிய அகதிகள் குறித்து விஷேட தீர்மானமொன்றை எடுக்க இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் இன்று (திங்கட்கிழமை) அவசரமாக கூடவுள்ளது.
இந்த கூட்டத்திற்கு கலாச்சார, நீதி, வெளிவிவகாரம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சட்டமும் ஒழுங்கு துறை உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் சமூகமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர பொலிஸ்துறை திணைக்களம் சிறைச்சாலை திணைக்களம் மற்றும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகளும் இந்த கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் தஞ்சம் புகுந்துள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கு எதிராக பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இதுகுறித்த தீர்க்கமான முடிவு இன்று எடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.