இன்றைக்கு சர்வதேச நாடுகளிடம் நாங்கள் அரசியல் தீர்வு திட்டத்தில் ஏமாறுகின்ற போது, அல்லது ஏமாற்றம் அடைகின்ற போது சர்வதேச நாடுகளிடமும் ஐ.நா. சபையிடமும் நியாயம் கேட்பதற்கான வழிமையை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? என நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் சமகால அரசியல் கள நிலை தொடர்பான விழிர்ப்புணர்வு கருத்தமர்வு கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.
இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
எங்களிடம் பலம் இல்லை. சர்வதேசத்திடம் தான் நாங்கள் நியாயம் கேட்க வேண்டும். அப்படி என்றால் இந்த அரசாங்கத்திற்கு எங்களுடைய இனப்பிரச்சினையை வெல்வதற்கு சில விட்டுக்கொடுப்புக்களை செய்ய வேண்டும். அது சரினாகதி அரசியல் இல்லை என்பதனை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.
நாங்கள் இந்த அரசாங்கத்திற்கு நிறைய விட்டுக்கொடுப்புக்களை அரசாங்கத்திற்கு வெளியில் இருந்து ஆதரித்ததன் காரணத்தினால் தான் இன்றைக்கு எங்களுடைய மாவீரர் துயிலும் இல்லங்களுக்குச் சென்று விளக்கேற்றக்கூடிய வசதிகள் கிடைத்துள்ளது.
கடந்த அரசு காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவினர்கள் இன்றைக்கு பல மாதங்களாக தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதனை சொல்லுகின்ற வகையில் தொடர்ச்சியாக நியாயமான போராட்டங்களை மேற்கொள்ளுகின்றார்கள் என்று சொன்னால் அது அரசுக்கு செய்கின்ற ஆதரவு.
இன்றைக்கு எங்களுடைய மக்களின் காணிகள் பலவற்றை இராணுவம் சூரையாடியுள்ளது. அந்த நிலங்களை மீட்டு தர வேண்டும் என்பதற்காக மக்கள் இராணுவத்திற்கு எதிராக போராடுகின்றனர்.
எம் மக்களுக்கு அந்த துணிச்சல் வந்தது இன்றைக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு அரசியல் ரீதியாக தம் இனத்திற்கு பெற்றுக்கொடுக்க வேண்டிய பல விடையங்களை தாண்ட வேண்டும் என்பதற்காக இந்த அரசாங்கத்திற்கு வெளியில் இருந்து கொண்டு செய்கின்ற ஆதரவுகள் தான் இன்றைக்கு எங்களுடைய போராட்டங்களை மேலே கொண்டு வர வைத்துள்ளது என்பதனை யாரூம் மறந்து விட முடியாது என அவர் தெரிவித்தார்.