டுபாய் நகரத்தின் மத்திய பாலைவனத்தில் செவ்வாய்க் கிரகம்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரு நகரமான டுபாய் நகரத்தில் செவ்வாய்க்கிரகத்தின் மாதிரிக் குடியிருப்பு உருவாக்கப்பட்டுவருகிறது.

Capture

 

இந்த குடியிருப்பானது செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் சுவாத்தியமாக வாழ்வதற்கான பயிற்சி மையமாகவே உருவாக்கப்பட்டு வருகிறது.

 

பல காலமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் வாழமுடியுமா அதற்கான ஏது நிலைகள் என்ன என்பன பற்றிய ஆய்வுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பூமிக் கிரகத்தின் ஏராளமான பண்புகளைக் கொண்டு விளங்கும் செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்களைக் கொண்டுசென்று குடியமர்த்துவதற்கான முதற்கட்ட திட்டங்களை பல பன்னாட்டு நிறுவனங்களும் முன்னெடுத்துவருகின்றன.

 

அதன்வழியே தற்போது இத்தகைய நடவடிக்கையில் ஐக்கிய அரபு இராச்சியம் கடும் முனைப்புடன் இறங்கியுள்ளது என்று சொல்லப்பட்டுள்ளது.

இதன்படி செவ்வாய்க்கிரகம் எப்படி இருக்குமோ அதேபோன்ற மாதிரிக் கிரகம் ஒன்று டுபாய் நகரத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி 19 லட்சம் சதுர அடி பரப்பளவில் இராட்சத கூண்டு அமைக்கப்பட்டுவருகிறது.

இலங்கை மதிப்பில் சுமார் 2 ஆயிரத்து 200 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டுவரும் இந்த இராட்சத கூண்டானது டுபாய் நகரத்தின் மத்திய பாலைவனத்தில் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.