சிறுவர் தினத்திற்கான நிகழ்ச்சிகளுக்காக மாணவர்களுக்கு நடனம் பயிற்றுவித்த ஆசிரியை அந்த மேடையிலேயே மரணமடைந்துள்ளார்.
மெனிக்திவெல்ல மத்திய மஹா வித்தியாலயத்தில் கடமையாற்றி வந்த 45 வயதான தீபா குமாரி குலதுங்க என்ற ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த ஆசிரியையின் மரணம் தொடர்பில் சரியான காரணங்களை கூற முடியாத காரணத்தினால் உடல் பாகங்களை அனுப்பி பரிசோதனைக்காக அனுப்பி வைக்குமாறு கண்டி வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி எம்.சிவசுப்ரமணியம் பணிப்புரை விடுத்திருந்தார்.
இதன்படி, குறித்த ஆசிரியையின் மரணத்திற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது.
இந்த ஆசிரியை புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும், நீண்ட காலம் சிகிச்சை பெற்றுக் கொண்டு வந்தார் என தெரிவிக்கப்படுகிறது. புற்று நோய் காரணமாக ஆசிரியை உயிரிழந்திருக்கலாம் என குறிப்பிடப்படுகிறது.
உடலை வருத்தி வேலை செய்ய வேண்டாம் என இந்த ஆசிரியைக்கு ஆலோசனை வழங்கப்பட்ட நிலையில் நடனம் பயிற்றுவித்துக் கொண்ருந்த போது அதே மேடையில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.