இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடியுடன் தொடர்புடைய பேர்பச்சுவல் டிரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸின் மீது வெளிநாட்டுப் பயணங்கள் மீது இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையுத்தரவு நாளைய தினம் முதல் அமுலுக்கு வருகிறது என்று கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
அத்துடன் பேர்பச்சுவல் டிரசரீஸ் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன மற்றும் மேலும் இருவருக்கும் வெளிநாடு செல்ல இடைக்காலத் தடையுத்தரவை நீதிமன்றம் இன்று பிறப்பித்திருக்கிறது.
இலங்கை மத்திய வங்கியில் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பிணை,முறிகள் விற்பனையின்போது பாரியளவான மோசடி தொடர்பில் விசாரணைக்காக அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் வழிநடத்தலில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அவரது உறவினரான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட பலரிடம் நிதிமோசடி தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.