கிழக்கு மாகாணத் திணைக்களங்களில் கடமையாற்றும் எந்தவொரு அதிகாரிக்கும் இடமாற்றம் வழங்க வேண்டாம் – ரோஹித போகொல்லாகம

கிழக்கு மாகாணத் திணைக்களங்களில் கடமையாற்றும் எந்தவொரு அதிகாரிக்கும் இடமாற்றம் வழங்க வேண்டாம் என கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம திணைக்களங்களின் செயலாளர்களுக்கும் பணிப்பாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

rohitha

கிழக்கு மாகாண பிரதம செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர், திணைக்களங்களின் செயலாளர்கள் ஆகியோருடன் இன்றைய தினம் இடம்பெற்ற விசேட சந்திப்பிலேயே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

குறிப்பாக கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தில் கடமையாற்றும் அதிகாரிகளுக்கோ அல்லது ஊழியர்களுக்கோ டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி வரை எவ்வித இடமாற்றங்களும் வழங்கவேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கிழக்குமாகாண பிரதி சுகாதாரப் பணிமனையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வருடாந்த இடமாற்றம், ஜனவரி மாதம் வழமைபோல் நடைபெறுமென கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் கே.முருகானந்தம் தெரிவித்தார்