பேய் நகரமா சென்னை என்ற கேள்வியை நம் மனதில் தூண்டும் விதமாக இணையத்தில் ஏராளமான காணொளிகள் உலா வந்துகொண்டு இருக்கின்றன.
அந்த வகையில் சென்னையில் பேய் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என 10 இடங்கள் சொல்லப்படுகின்றன.
கரைகாட்டுகுப்பம், கடலோர பகுதியான இங்கு கடந்த 2004 ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரிடரில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும் தற்போதுவரை இரவு நேரங்களில் அந்த பகுதியை கடந்த செல்லும் வாகன ஓட்டிகள் குழந்தைகள் மற்றும் ஒரு முதியவரின் குரலை கேட்பதாக சொல்லப்படுகிறது.
தாம்பரம் பகுதியில் அமைந்துள்ள மெட்ராஸ் கிரிஸ்டீன் கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இருப்பினும் சென்னையில் சுற்றியுள்ள திகில் பகுதிகளின் பட்டியலில் இதற்கு ஒரு இடம் அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று டிமாண்டி காலனி, வால்மிகி நகர், பெசண்ட் நகரில் உள்ள ப்ரோக்கன் பிரிட்ஜ், என பட்டியல் நீண்டு கொண்டேபோகிறது.
குறிப்பாக சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை, சென்னை வாசிகள் மிக சாதாரணமாக பயணத்திற்காக பயன்படுத்தும் ஈ.சி.ஆர் சாலை போன்றவை, விபத்துக்கள் மூலம் உயிர்வாங்கவும் தயங்கியதில்லை.
இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளனர். சென்னையை தாண்டிய செல்லும் கிழக்கு கடற்கரை சாலை இரவு நேரங்களில் தன்னுடைய இன்னோரு முகத்தை காட்டத்தொடங்கி விடுகிறது என சொல்லப்படுகிறது.
அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கும் பகுதிகலாக இவைகள் சொல்லப்பட்டாலும் கூட இவை வெறும் பெயரளவில் வதந்திகளாகவே செவிவழி செய்திகளாக உலா வந்துகொண்டு இருக்கின்றன.