முல்லைத்தீவு- மணலாறு பிரதான வீதி சந்தி தரைப்படை முகாமில் இராணுவவீரர் ஒருவரின் சடலம் நேற்று காலை மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரனைகளில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.