சுற்றுலாத் தலங்களிலே அதிகமாக மக்களை கவரப்பட்ட இடங்களின் ஒன்றான தாஜ்மஹால் சுற்றுலாப் பட்டியிலில் இருந்து நீக்கப்பட்டாக உத்திர பிரதேச அரசு தகவல் வெளியிட்டது.
உத்தரப்பிரதேச அரசு வெளியிட்டுள்ள சுற்றுலாப் பட்டியலில் தாஜ்மஹால் நீக்கப்பட்டுள்ளது என்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு உத்தரப்பிரதேசத்தின் சுற்றுலாத் தலங்களுக்கான புதிய பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் அதில் உலகப் புகழ்வாய்ந்த தாஜ்மஹால் இடம்பெறவில்லை.
உத்திரப்பிரதேச அரசின் புதிய சுற்றுலா மையங்களின் பட்டியலில் காசி நகரத்திற்கு முதலிடம் அளிக்கப்பட்டுள்ளதுடன் கிருஷ்ணரின் பிறப்பிடமான மதுராவுக்கு இரண்டாவது இடம் அளிக்கப்பட்டுள்ளது.
உலக அதிசயங்களில் ஒன்றான இந்த தாஜ்மஹால் முழுவதும் வெள்ளை சலவைக்கல்லால் கட்டப்பட்டது. தாஜ்மஹால் இந்திய கலாச்சாரத்தை பின்பற்றி கட்டப்படாததால் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.