தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கிரைம் தொடர் பார்த்து மாமனார், மாமியார் மற்றும் கொழுந்தனை கொன்ற இளம் பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் குர்கான் பகுதியை சேர்ந்தவர் கீதா டோமர்(24). இவர் கிரைம் தொடர்களை விரும்பி பார்ப்பது வழக்கம். இவரது கணவர் போதைக்கு அடிமையாகி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதனையடுத்து தனது மாமியார் புஷ்பா(60), மாமனார் சத்பால்(65), கொழுந்தன் பங்கஜ் குமார்(38) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் சொத்து தகராறு வெடித்துள்ளது. தனது கணவனின் குடும்பத்தை கொன்று விட்டால் 18 கோடி மதிப்பிலுள்ள மொத்த சொத்தும் தமக்கு கிட்டிவிடும் என கீதா திட்டம் போட்டுள்ளார்.
இவரது திட்டத்திற்கு வீட்டில் வேலை பார்த்து வந்த ராஜஸ்தான் இளைஞரும் உதவ முன்வந்துள்ளான். இதனையடுத்து தக்க சந்தர்ப்பம் வாய்த்தபோது 3 பேரையும் கழுத்தை நெறித்துக் கொன்று உடல்களை ராஜஸ்தான் மாநிலத்தின் ஆழ்வார் மாவட்டத்தில் எடுத்துச் சென்று எரித்துள்ளனர்.
இந்த நிலையில் சத்பாலின் மகள் ஹேமலதா அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், குறித்த சம்பவங்களை வெளிக்கொண்டு வந்துள்ளனர். தற்போது கீதாவையும் கொலை செய்ய உதவிய ராஜஸ்தான் இளைஞரையும் கைது செய்துள்ள பொலிசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.