நியூயார்க் வீதிகளில் இறங்கி, தனது பாய் ஃப்ரெண்ட் விக்னேஷ் சிவனுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டுள்ளார்..
அங்கு நயனை அடையாளம் கண்டுகொண்ட எல்லோருக்குமே எவ்வித தயக்கமுமின்றி செல்ஃபிக்களை எடுத்து மக்களின் நம்பிக்கை நாயகியாக வலம் வருகிறார்..
ஆனால், எல்லா செல்ஃபிக்களையும் கடந்து இப்போது வெளியாகியிருக்கும் ஒரு புகைப்படம் நயன்தாராவின் மாற்றத்தை வெளிக்காட்டியிருக்கிறது.
நயன்தாரா கையிலிருந்த ‘Pரபு’ என்ற டாட்டூவின் வரலாறு அனைவரும் அறிந்தது.நடிகர் பிரபு தேவாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு பின் பிரிந்தனர்..
இருவரும் பிரிந்த பின் டாட்டூ நீக்கப்பட்டுவிட்டதாக பலமுறை வதந்திகள் கிளம்பின.
ஆனால், சில புகைப்படங்களில் மீண்டும் அவரது கைகளில் டாட்டூ காணப்பட்டது. ஆனால் அந்த டாட்டூ மாற்றப்பட்டிருக்கிறது.Pரபு என எழுதப்பட்டிருந்த அந்த டாட்டூவின் மற்ற எழுத்துகளை நீக்கிவிட்டு, Positivity என நீளமாக அந்த டாட்டூவை மாற்றியிருக்கிறார் நயன்தாரா. என்ன ஒரு புதுமை??
டாட்டூ மாற்றப்பட்ட சம்பவத்தைவிட முக்கியம், அது என்னவாக மாறியிருக்கிறது என்பதுதான்.. பெண்ணாக லேடி சூப்பர் ஸ்டார் என கூறும் அளவிற்கு வளர்ந்துள்ளார் என்றால் அது அவரது Positivity ஆகும் அதை தான் டாட்டூவில் கூறியுள்ளார்..