5 மொழிகளில் வெளியாகும் இந்தியன்-2

21 வருடங்களுக்கு முன்பு வெளியான படம் இந்தியன். கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவான அந்த படம் ஊழலுக்கு எதிரான கதையில் உருவானது. இந்த நிலையில், தற்போது இந்தியன்-2 படம் விரைவில் தொடங்கயிருக்கிறது. மீண்டும் கமல்-ஷங்கர் இணையும் இந்த படம் முழுக்க முழுக்க இன்றைய அரசியலை பேசப்போகிறது. அதில் ஊழலும் அடங்கும். ஆனால் இந்த படத்தில் மீண்டும் கமல் இரண்டு வேடங்களில் நடிக்கப்போகிறாரா? இல்லையா? என்பது தெரியவில்லை.

4QfNwArsTHJVNINDIAN1

மேலும், தமிழில் இந்தியன்-2 என்ற பெயரில் வெளியாகும் அப்படம் தெலுங்கில் பாரதியூடு-2 என்ற பெயரில் தயாராகிறது. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்த படத்தை மலையாளம், இந்தி, ஆங்கில மொழிகளில் டப் செய்து வெளியிடுகிறார்களாம். அதோடு, ஷங்கர் இயக்கி வரும் படங்களுக்கு உலக அளவில் பெரிய வியாபாரம் இருந்து வருவதால், இந்தியன் படத்தை விடவும் பிரமாண்ட பட்ஜெட்டில் இந்தியன்-2 தயாராகயிருப்பதாக கூறப்படுகிறது.