யாழ் பல்கலைகழகத்தை அண்மித்த தின்னவேலி பகுதியில் பெருமளவாக உள்ள வீடுகளில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்து அங்கே வாடகைக்கு வீடுகளில் வசித்து வருவது பெண் பிள்ளைகள் என்பது அனைவரும் அறிந்ததே.
தற்போது சிலபல நாட்களாக அவர்களின் வீட்டு அறைகளுக்கு பின்புறம் மர்ம நபர்கள் நடமாடித் திரிவதாக அதிர்வு இணையம் அறிகிறது. இச்சம்பவம் அம் மாணவிகளையும் ,அவர்களது குடும்பத்தினரையும் கடும் அச்சத்திற்கு உண்டாக்கியுள்ளது.
இதே வேலை இதையறிந்த அவ வீடுகளின் உரிமையாளர்களும் இதுவரையில் காவல்துறைக்கு கூட இந்த சம்பவத்தினை தெரியபடுத்தவில்லை என்றும் அம்மாணவிகள் எமது மின்னஞ்சலுக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.
இதன்பின்னர் இவர்களை நம்பி எவ்வித பிரயோஜனமும் இல்லை ,நாங்களே முடிவை எடுப்போம் என்று அந்த இளம்பெண்கள் நள்ளிரவில் யாழ் போலிஸ் நிலையத்திற்கு விரைந்து முறைப்பாட்டை தெரிவித்துள்ளனர்.
இதன்பின்னர் அந்த நிமிடம் முதலே இலங்கை அதிரடிப்படையினரும் போலிஸ் பிரிவினரும் அந்த பகுதியை சூழ கடும் பாதுகாப்பை உண்டாக்கியுள்ளதாகவும் அதிர்வு இணையம் அறிகிறது.
இனிமேலும் நள்ளிரவில் குளியலறையை எட்டிபார்க்கும் அந்த மர்ம நபர்கள் தங்களது வாலை ஆட்ட முடியாது. சுருட்டி வைக்க வேண்டியது தான்……