மன்னார் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட அதிஷ்டத்தால் இலங்கை பணக்கார நாடாக மாறுவதற்கான வாய்ப்பு.

இலங்கையின் வடக்கே மன்னார் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட அதிஷ்டத்தால் இலங்கை பணக்கார நாடாக மாறுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

images (15)

 

மன்னார் கடற்படுகையில் இயற்கை எரிவாயு வைப்புக்கள் இருப்பது தெரிந்ததே இவற்றினை இன்னும் சில ஆண்டுகளில் எரிபொருளாகத் தயாரிப்பதற்கு எண்ணியுள்ளதாக பெற்றோலிய வள மேம்பாட்டுச் செயலகம் தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த ஆண்டளவில் இயற்கை எரிவாயு உற்பத்திக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் மேற்படி செயலகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை 4442 அடி ஆழத்தில் சுமார் 2 மில்லியன் கலன்கள் இயற்கை எரிவாயு மற்றும் 10 மில்லியன் பீப்பாய் திரவ எரிவாயு என்பன குறித்த கடற்படுகையில் உள்ளதாக நம்பப்படுகிறது.

பொதுவாக இலங்கையின் எரிபொருள் தேவையானது இறக்குமதியினையே நம்பியுள்ளது. இதனால் வருடாவருடம் நாட்டின் பொருளாதாரம் எரிபொருளால் எரித்துச்செல்லப்படுவதாக வர்ணித்துள்ள பொருளியலாளர்கள், இலங்கையில் எரிபொருள் உற்பத்தி ஆரம்பிக்கப்படுமாயின் நாட்டின் கடன்சுமை நீங்குவதோடு செல்வந்த நாடாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகளும் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

 

0ca47-100eisenbahnzugbruecke_rameshwaram