தனது காரை வேகமாக பின் தொடர்ந்த ரசிகர்களுக்கு, காரை நிறுத்தி வேண்டுகோள் விடுத்திருக்கிறார் சூர்யா.
சென்னையில் படப்பிடிப்பு முடிந்துவிட்டு, காரில் சூர்யா வீட்டிற்கும் திரும்பியுள்ளார். அப்போது காரில் சூர்யா இருக்கிறார் என்பதை தெரிந்துகொண்ட சில ரசிகர்கள், மிக வேகமாக காரைப் பின் தொடர்ந்திருக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் சூர்யா காரை நிறுத்தி, அவர்களோடு பேசியிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் ரசிகர்களிடம் சூர்யா பேசியிருப்பதாவது:
உங்களுடைய அன்புக்கு நன்றி. இப்படி வேகமாக போவது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. தயவு செய்து வேகத்தோடு விளையாடாதீர்கள். வேகமாக போகாதீர்கள். உங்களை கையெடுத்து கும்பிட்டுக் கேட்டு கொள்கிறேன். வேகமாக வராதீர்கள், வேகமாகவும் ஓட்டாதீர்கள். அன்புக்கு நன்றி. என் மீது அன்பிருந்தால் நான் சொல்வதை கேளுங்கள்.
இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.