லண்டனில் இன்று கைது செய்யப்பட்ட, இந்திய தொழிலதிபர்.

லண்டனில் இன்று கைது செய்யப்பட்ட, இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா பிணையில் விடுவிக்கப்பட்டார். அது குறித்த மேலதிக விசாரணையானது டிசம்பர் மாதம் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

_95686723_vijaymallya

இந்திய அரசு அவருக்கு எதிராக இந்தியாவில் கூடுதலான பண மோசடி குற்றச்சாட்டுக்களை சுமத்தியது.

பணமோசடி குற்றச்சாட்டு மற்றும் அதுகுறித்த ஆதாரங்கள் ஆகியவை பிரதான மோசடி குற்றச்சாட்டுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

முக்கியமாக இப்புதிய குற்றச்சாட்டானது பணம் எங்கு சென்றதென்றும், உதாரணத்திற்கு அதில் குறிப்பிட்ட அளவு பணமானது போர்ஸ் இந்தியா என்னும் மோட்டார் வாகன பந்தய அணிக்காக செலவிடப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பண மோசடியில் ஈடுபட்டதற்கான புதிய குற்றச்சாட்டுகள் ஏற்கனவே உள்ள மோசடி குற்றச்சாட்டுகளுடன் இணைந்துள்ளன.

மேலும், இதுகுறித்த சட்டரீதியான செயல்முறை மூலம் விஜய் மல்லையாவை நாடு கடத்த மற்றும் மீண்டும் கைது செய்வதற்கான உள்துறை அமைச்சகத்தின் வேண்டுகோள் இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது தாக்கல் செய்யப்பட்டது.

தற்போதுள்ள அட்டவணை ஏற்றுக்கொள்ளப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட விஜய் மல்லையாவின் அடுத்த கட்ட வழக்கு விசாரணை வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வரும் டிசம்பர் 4ம் தேதி தொடங்குகிறது.

அப்போது அவரை நாடு கடத்துவதற்கான வழக்கு குறித்தும் விசாரிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.