தாஜ்மகால் நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் சின்னம் அல்ல என்பது நமது கருத்து.
தாஜ்மகால் உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள கலாச்சார சின்னங்கள் பற்றிய பட்டியலில் இடம்பெறவில்லை என்பது ஊடகங்களின் தற்போதைய பிரச்சாரம்.
உண்மையில் நடந்தது என்ன?
கடந்த திங்கட்கிழமை அன்று, உத்திரப்பிரதேச மாநில அரசு ரூபாய் 370 கோடி மதிப்புள்ள சுற்றுலா வளர்ச்சி திட்டங்களை அறிவித்தது.
அதில் பாதி அளவுக்கு ரூபாய் 156 கோடி தாஜ்மகால் மற்றும் ஆக்ரா குறித்த சுற்றுலா வளர்ச்சி திட்டங்களே.
இந்த திட்டங்கள் குறித்து மாநில அரசு பத்திரிக்கை குறிப்பும் வெளியிட்டது.
இதில் கலாச்சார சின்னங்கள் குறித்த ஒரு பட்டியலும் உண்டு.
அதில் கோவில்களே இடம் பெற்றுள்ளன.
மாநில சுற்றுலா வளர்ச்சித்துறையின் டைரக்டர் ஜெனரல் அவினாஷ் அவஸ்தி கூறுகையில் இந்த பட்டியல் வளர்ச்சி திட்டங்கள் நடைபெறும் சில இடங்களை பற்றியதே; முழுமையான பட்டியல் அல்ல எனவும் தெரிவித்தார்.
அதற்குள்ளாக, இதற்கான விளக்கத்தை கேட்க விரும்பாமல் வியாபார ஊடகங்கள் வதந்தி பிரச்சாரம் செய்து விட்டன.
நாமும் நமது விருப்பம் அது என்பதால் கொண்டாடி வருகிறோம்.
உண்மையில், கலாச்சார சின்னங்கள் குறித்த பட்டியலில் தாஜ்மகால் நீக்கப்படவும் இல்லை.
மாறாக, கூடுதல் நிதி தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கு எதிர்மாறாக பிரச்சாரம் நடத்துகிறது வியாபார ஊடகங்கள்.
இது தான் அவர்களுடைய வெற்றி. நம்முடைய தோல்வி.