இலங்கையில் சிறையில் சிக்கி தவிக்கும் பெண்கள்.

போதைப்பொருள் தொடர்பான குற்றமிழைத்தவர்களில் அதிகளவானோர் பெண்களே சிறைச்சாலைகளில் சிறை வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதனை நேரடியாகவே காணக்கூடியதாக இருக்கின்றது என சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி யாசுகி டிகேந்திரன் தெரிவித்தார்.

Tamil_Daily_News_2395702600480

சர்வதேச சிருவர் தின நிகழ்வுகள் நேற்று கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையில் கல்லூரி முதல்வர் அருட்சகோதரர் செபமாலை சந்தியாகு தலைமையில் நடைபெற்றது.

இதன்போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.

மாணவர்கள் என்பவர்கள் மிகவும் அவதானமாக நடக்கவேண்டிய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்று தெரிவித்த அவர் பணத்தினை காட்டி அவர்களை அடிமையாக்கி துன்புறுத்த அதிகமானோர் காத்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்று குறிப்பிட்டார்.

போதைப்பொருள் என்ற கொடிய அரக்கனால் இன்று மாணவர்கள் பெரிதும் அடிமைகளாக ஆக்கப்படுகின்றனர்.

இந்த விடயத்தில் மாணவர்கள் மிகவும் அவதானமாக நடந்து கொள்வது மிகவும் முக்கியமான விடயமாகும்.

மாணவர்களாகி உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக உங்களது வீட்டில் உள்ள தாய் தந்தையர்களுடன் கலந்துரையாடுங்கள்.

அவர்கள் மூலம் அதற்கான தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு முயற்சியுங்கள் அவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் பிரச்சனை அற்றவர்களாக சமூகத்தில் வாழ முடியும் என்று மேலும் தெரிவித்தார்.