இந்திய அணி வீரர் ரோகித் சர்மாவை பாராட்டிய குமார் சங்ககாரா.

இந்திய அணி வீரர் ரோகித் சர்மாவை இலங்கை அணி முன்னாள் வீரர் குமார் சங்ககாரா பெரிதும் பாராட்டியுள்ளார். இந்தியா – அவுஸ்திரேலியா அணிகள் இடையில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றி சாதனை படைத்தது. சமீபத்தில் நடந்த ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி சதமடித்தார். இந்நிலையில் ரோகித் சர்மாவின் ஆட்டத்தை இலங்கை அணியின் ஜாம்பவான் குமார் சங்ககாரா டுவிட்டரில் பாராட்டியுள்ளார்.

46tgb433rt3

அதில், ரோகித் சர்மா தொடர்ந்து சிறப்பாக மெறுகேறி வருகிறார். அதே நேரத்தில் வசீகரமாகவும், அதிரடியாகவும் அவரின் ஆட்டம் உள்ளது. நேற்றைய ஆட்டம் சிறப்பானதாக இருந்ததாக பதிவிட்டுள்ளார்.