நாளை (5-10-2017) வெற்றி தரும் புரட்டாசி பவுர்ணமி விரதம்.

download3
புரட்டாசி மாதத்தில் நவராத்திரியில் அன்னை கொலு விருந்து 10-வது நாள் விஜயதசமி அன்று மகிஷனை வதம் செய்தாள்-. அதனால் எழுந்த கோபத்தினால் அன்னை உக்கிரமாக இருந்தாள்.

பவுர்ணமி அன்று அம்பாளை பிரம்மன், விஷ்ணு, இந்திரன் முதலியோர் போற்றித் துதித்தனர். அதன் விளைவாக குளிர்ச்சியான ஒளி பொருந்திய முகத்துடன் பவுர்ணமியில் சாந்த சொரூபிணியாக அன்னை காட்சி அளித்தாள்.

நவராத்திரி விரதமிருப்பவர்கள் புரட்டாசி மாத பவுர்ணமி அன்றும் விரதமிருந்து மாலை சந்திர உதயத்தில் நிலவையும் அம்பாளையும் தரிசனம் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை செய்பவர்கள் தங்கள் வாழ்வில் மேற்கொள்ளும் எல்லாக் காரியங்களிலும் வெற்றி பெறுவார்கள்.

புரட்டாசி பவுர்ணமி தினத்தன்று தேவர்கள் அன்னையின் நாமத்தை ஜெபித்தபடியே தியானமும் தவமும் செய்து அன்னையின் அருளைப் பெறுவார்கள். பவுர்ணமி இரவின் நடுநிசியில் தியானம், ஜெபம், பூஜை, பிராணாயாமம், தவம் செய்தால் இறைசக்தி உடனே கிடைக்கும்.

இந்நாளில் விரதம் இருப்பவர்கள் இரவில் குறைவான எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய ஆகாரத்தை உண்ண வேண்டும். இவ்வாறு உண்டால் நள்ளிரவில் தியானம் செய்வதற்கும், பிராணாயமம் செய்வதற்கும் ஏதுவாக இருக்கும்.

இந்தச் சக்தியை நல்ல வழியில் பயன்படுத்துவோருக்கு மேலும் மேலும் இறைவனின் அருள் கிடைக்கும். இப்படி பட்டவர்களுக்கு நல்ல தேஜசும் நடக்க இருக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் சக்தியும் கிடைக்கும். இவர்கள் எந்த காரியத்தைத் தொடங்கினாலும் வெற்றி கிடைக்கும்.

புரட்டாசி பவுணர்மியன்று சிவபிரானை (வருடம் தோறும்) காலையில் வழிபட்டால் முற்பிறப்பு தீவினைகள் எல்லாம் ஒழியும். மதியம் வழிபட்டால் முற்பிறவியோடு இப்பிறப்பு தீவினைகளும் ஒழியும். மாலையில் வழிபட்டால் ஏழு பிறவிகள் தோறும் முற்றிய தீவினைகள் எல்லாம் ஒழிவதோடல்லாமல் விரும்பியன எல்லாம் வந்து சேரும்.