இலங்கையின் உயரமான நீர்வீழ்ச்சி என பெயரிடப்பட்ட பம்பரகந்த நீர்வீழ்ச்சி வற்றிப் போகும் அபாயத்தை எட்டியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் முறையாக பாதுகாக்கப்படாமையினால், சர்வதேச ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
863 மீற்றர் அடி உயரமான இந்த நீர்வீழ்ச்சி முழுமையாக வற்றிப் போனால் இலங்கையின் உயரமான நீர்வீழ்ச்சி என்ற சாதனை இல்லாமல் போகும்.
இதன் காரணமாக இலங்கையின் சுற்றுலாத்துறை மிகவும் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
பதுளை – கொழும்பு வீதிஹல்தும்முல்ல பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கழுபஹன சந்தியின் தெற்கு மலை பகுதியில் அமைந்துள்ள வீரகோன்கம வீதியில், 4 கிலோ மீற்றர் தூரம் சென்ற பின்னர் இந்த நீர்வீழ்ச்சியை நெருங்க முடியும்.
நீர்வீழ்ச்சியை சென்றடைவதற்குச் சிறப்பான வீதி கட்டமைப்புகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
நீர் வீழ்ச்சிக்கு அருகில் சென்று பார்வையிடுவதற்கு சிறிய அளவிலான கட்டணம் அறவிடப்படுகின்றது.
எனினும் இந்த நீர் வீழ்ச்சியை பாதுகாப்பதற்கு இதுவரை எந்தவொரு அதிகாரியோ அல்லது சுற்றுச் சூழல் அமைப்புகளோ தலையிடவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பம்பரகந்த நீர்வீழ்ச்சி செல்லும் நீர், இடை நடுவில் சட்டவிரோதமாக பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
இதன் காரணமாக நீர்வீழ்ச்சிக்கு செல்லும் நீரின் அளவு குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.