இலங்கையில் மலையகத்திலுள்ள தைக்கப்பட்ட ஆடை தொழிற்சாலையொன்றில் பணியில் இருந்த சுமார் 200 பெண் பணியாளர்கள் திடிரென மயக்கமுற்ற நிலையில் அரசாங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டம் டிக்கோயா பிரதேசத்தில் அந்த தொழிற்சாலை அமைந்துள்ளது.
இன்று புதன்கிழமை காலையில் வழங்கப்பட்ட உணவால் ஏற்பட்ட ஒவ்வாமையே இதற்கு காரணமாக இருக்கலாம் என காவல் துறை தரப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது. விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இருந்த போதிலும் அவர்கள் மயக்கம் அடைந்ததற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என டிக்கோயா வைத்தியசாலை நிர்வாகம் தெரிவிக்கின்றது.