தாதியர் பயிற்சிக்கு க.பொ.சாதாரண தர பெறுபேறுடன் விண்ணப்பிக்க முடியாது – யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி

தாதியர் பயிற்சிக்கு க.பொ.சாதாரண தர பெறுபேறுடன் விண்ணப்பிக்க முடியாது. இவ்வாறான வதந்தி செய்திகளை நம்பவேண்டாம் என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி அவர்கள்  கருத்து தெரிவித்தார்.

hospital-saththeya-moorthy-350x175

உயர்தர பரீட்சையில் 3 சித்தியடைந்தவர்களும், சாதாரண தரப்பரீட்சையில் 6 பாடம் சித்தியடைந்தவர்களும் தாதியர்களுக்கு விண்ணப்பிக்க முடியும்

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

விண்ணப்பிக்க விரும்புவர்கள் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளரும், உப தலைவருமான பாலசிங்கம் சிவயோகம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

வடமாகாணத்தில் உயர்தரப் பரீட்சையில் உயிரியல் மற்றும் கணிதம் உட்பட 3 பாடங்களில் சித்தியடைந்தவர்களும், சாதாரண தரப்பரீட்சையில் தமிழ், கணிதம், ஆங்கிலம் மற்றும் விஞ்ஞானம் உள்ளிட்ட 6 பாடங்களில் சித்தியடைந்தவர்கள் தாதியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்படுகின்றது.

தாதியராக விரும்புபவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை தாதிய சங்கத் தலைவர் பாலசிங்கம் சிவயோகம் 0713526234 என்ற தொலைபேசி இலக்கத்துடனும், shivajokam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியூடாகவும் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக 18 வயது முதல் 28 வயதுடைய தாதிய பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்பியவர்கள் தங்களது விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்