‘புளூ வேல்’ விளையாட்டை முறியடிக்க, புதிய விளையாட்டா…..?

கேரளாவில் உள்ள கல்லூரி மாணவர்களும், போலீசாரும் இணைந்து ‘புளூ வேல்’ விளையாட்டை முறியடிக்க, புதிய விளையாட்டை கண்டுபிடித்துள்ளனர்.

201708281512085444_Blue-Whale-Challenge-Class-VI-student-hangs-himself-to_SECVPF

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில் :-

இந்த விளையாட்டின் முதல் நிலையில், விளையாடும் நபர் தங்களுடைய தாயின் கன்னத்தில் முத்தமிட வேண்டும் என உத்தரவிடப்படும்.

இரண்டாவது, நிலையில் பத்து வகையான புத்தகங்களை படிக்க வேண்டும்.

மூன்றாவது நிலையில், முதியோர் இல்லம் அல்லது அனாதை இல்லத்திற்கு சென்று சேவை செய்ய வேண்டும்.

நான்காவது நிலையில், சுற்றுலா செல்ல வேண்டும். அதற்கு அடுத்த
கட்ட நிலையில் சேற்று நிலத்தில் விளையாட வேண்டும் என உத்தரவிடப்படும்.

அதன் பிறகு, விளையாடும் நபர் முதியோருடன் சேர்ந்து பழக வேண்டும்,

அடுத்த நிலையில், கடினமான பணி செய்து, ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க வேண்டும்.

இதையெல்லாம் முடித்த பிறகே, இறுதி நிலைக்கு செல்ல முடியும்.

இன்னும், சில நாட்களில் இந்த புதிய விளையாட்டு செயல்பாட்டுக்கு வரும் என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.