-
மேஷம்
மேஷம்: திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வேண்டாமே. அதிகம் உழைக்க வேண்டி நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: பிரச்னைகளை சமாளிக்கும் மனோ பலம் அதிகரிக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் வி.ஐ.பி
கள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். இனிமையான நாள். -
மிதுனம்
மிதுனம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
-
கடகம்
கடகம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
-
சிம்மம்
சிம்மம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமத
மாக வரும். உத்யோகத்தில் உங்களை பற்றி வதந்திகள் வரும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள். -
கன்னி
கன்னி: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். ஆடை, அணிகலன் சேரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
-
துலாம்
துலாம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் திறமையை கண்டு மேலதிகாரி வியப்பார். திடீர் யோகம் கிட்டும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் முன்னேற வேண்டுமென துடிப்பார்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். கனவு நனவாகும் நாள்.
-
தனுசு
தனுசு: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புது வேலை அமையும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்பு
கள் தேடி வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள். -
மகரம்
மகரம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பழைய சொத்து சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.
-
கும்பம்
கும்பம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். அழகு, இளமைக் கூடும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
-
மீனம்
மீனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மனஉளைச்சல் ஏற்படும். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் உணர்ச்சி வேகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். போராட்டமான நாள்.