வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் தற்போது வெளியாகியுள்ளன.இதனடிப்படையில் ஒவ்வொரு மாவட்டங்களுக்குமான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன.

children-school

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான சித்திக்கான வெட்டுப்புள்ளிகள் இதோ

யாழ்ப்பாண மாவட்டத்திற்கான வெட்டுப்புள்ளியாக 155 புள்ளிகளும், கிளிநொச்சி மாவட்டத்திற்கான வெட்டுப்புள்ளியாக 154 புள்ளிகளும்,  மன்னார் மாவட்டத்தில் தமிழ் மொழிமூல மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளியாக 153 புள்ளிகளும், சிங்கள மொழி மூலமான மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளியாக 158 புள்ளிகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள மொழி மூல மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளியாக 160 புள்ளிகளும், தமிழ்மொழி மூல மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளியாக 154 புள்ளிகளும் சித்திக்குரிய வெட்டுப்புள்ளியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான சித்திக்கான வெட்டுப்புள்ளிகள் இதோ

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளியாக 154 புள்ளிகளும், சிங்கள மொழி மூலமான மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளியாக 161 புள்ளிகளும் சித்திக்கான புள்ளிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

 

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மொழி மூலமாக தோற்றியவர்களுக்கான சித்திக்குரிய வெட்டுப்புள்ளியாக 154 புள்ளிகளும்,  அம்பாறை மாவட்டத்தில் சிங்கள மொழி மூல மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளியாக 159  புள்ளிகளும்,தமிழ் மொழி மூல மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளியாக 154 புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை அநுராதபுரம் மாவட்டம் சிங்கள மொழி மூலம் மாணவர்களுக்கு 160 வெட்டுப்புள்ளிகளும், தமிழ் மொழி மூல மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளியாக 153 புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொலநறுவ மாவட்டத்திற்கான வெட்டுபுள்ளிகளில் சிங்கள மொழி மூலம் தோற்றிய மாணவர்களுக்கு 160 வெட்டுப்புள்ளிகளும்,தமிழ் மொழி மூலம் தோற்றி மாணவர்களுக்கு 151 புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

பதுளை மாவட்டத்திற்கான வெட்டுப்புள்ளியாக சிங்கள மொழி மூலம் தோற்றிய மாணவர்களுக்கு 160 புள்ளிகளும், தமிழ் மொழி மூலம் தோற்றிய மாணவர்களுக்கு 153 புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

மொனராகல மாவட்டத்திற்கான சித்திக்கான வெட்டுப்புள்ளிகள் அடிப்படையில் தமிழ் மொழி மூல மாணவர்களுக்கு 151 புள்ளிகளும், சிங்கள மொழி மூலமான மாணவர்களுக்கு 158 புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்திற்கான வெட்டுப்புள்ளியாக சிங்கள மொழி மூல மாணவர்களுக்கு 162 புள்ளிகளும், தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்;கு 154 புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

 

கேகாலை மாவட்டத்திற்கான வெட்டுப்புள்ளியாக சிங்கள மொழி மூலமான மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளியாக 164 புள்ளிகளும், தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளியாக 156 புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள மொழி மூலமான மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளியாக 158  புள்ளிகளும், தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளியாக 152 புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

குருநாகல மாவட்டத்தில் சிங்கள மொழி மூலம் தோற்றிய மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளியாக 164  புள்ளிகளும், தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளியாக 156 புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டன.

அத்துடன் புத்தளம் மாவட்டத்தின் சிங்கள மொழி மூலமான மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளியாக 160  புள்ளிகளும்,தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கான புள்ளியாக 152 புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.