யாழில் சட்டத்தரணி, தன் இஞ்சினியர் கணவனை சிறைக்குள் தள்ளிய காரணம் என்ன?

சட்டத்தரணி மனைவியை தாக்கிய குற்றச்சாட்டில் பொறியியலாளரான கணவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் நீதிவான் நீதிமன்றம் இன்று (04.10.2017) உத்தரவிட்டுள்ளது.

download (1)

யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் வசித்து வந்த சட்டத்தரணியை அவரது கணவர்  தாக்கியதாக நேற்று குறித்த சட்டத்தரணியால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதனையடுத்து அவரது கணவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அவரை இம்மாதம் 17 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டார்.

இதேவேளை குறித்த தம்பதியினரின் இரண்டு மாத குழந்தையை கணவரின் தாயார் தூக்க முற்பட்டபோது அதனை மனைவி தடுக்க முற்பட்டதாகவும் அதனால் ஏற்பட்ட பிணக்கினாலேயே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.