சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று தனிப்பட்ட பயணமாக ஜேர்மனிக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார். இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு அவர், பின்லாந்துக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் இருந்து எதிர்வரும் 9ஆம் நாள் பின்லாந்து செல்லும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு பல்வேறு சந்திப்புகள், நிகழ்வுகளில் பங்கேற்பார்.
இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதற்காக பின்லாந்து செல்லும் சிறிலங்கா பிரதமர், வர்த்தகம், பொருளாதாரம், தொழில்துறை போன்றவற்றில், புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்வார்.