மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளை வரையறை செய்ய ஐந்து பேர் கொண்ட குழு!

மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளுக்கான எல்லைகளை வரையறுப்பதற்கான ஐந்து பேர் கொண்ட குழு சிறிலங்கா அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளது.

Parliament

கே.தவலிங்கம் தலைமையிலான இந்தக் குழுவில், பேராசிரியர் எஸ்.எச். ஹிஸ்புல்லா, கலாநிதி அனில டயஸ் பண்டாரநாயக்க, முன்னாள் தேர்தல் ஆணையாளர் சிறிவர்த்தன, பேராசிரியர்  சங்கர விஜயசந்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த ஐந்து பேர் கொண்ட குழுவே, மாகாணசபைத் தேர்தல் தொகுதிகளை வரையறை செய்யவுள்ளது.

மாகாணசபைகளுக்கு கலப்பு முறையில் தேர்தல் நடத்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், தொகுதி வரையறைக்கான குழு நியமிக்கப்பட்டுள்ளது.

தொகுதிகள் வரையறுக்கப்பட்ட பின்னரே, மாகாணசபைகளுக்குத் தேர்தலை நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.