தேசிய பாடசாலை இளம் ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை.

மாலபே – கஹன்தொட பகுதியை சேரந்த பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1-4

அப் வசித்து வந்த 30 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண் தேசிய பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக கடமையாற்றியவர் எனவும், அவர் குறித்த பாடசாலையில் இருந்து அண்மையில் பதவி விலகியுள்ளார் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தனது மகளுக்கு பிரச்சினைகள் எதுவும் கிடையாது என உயிரிழந்த பெண்ணின் தாய் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் உயிரிழந்த பெண் தற்கொலை செய்து கொள்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

எதுவும் நிரந்தரமல்ல என உயிரிழந்த பெண் தனது முகப்புத்தக பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

4-1