ஆண்டு முழுவதும் உருளைக்கிழங்கை மட்டுமே சாப்பிட்டு வந்த நபர்: ஏன் தெரியுமா?

உணவின்றி மனிதன் உயிர் வாழமுடியாது என்பது நிதர்சனம், ஒவ்வொரு வேளைக்கும் பலவிதமான உணவுகளை சாப்பிட்டே பலர் பழகியிருப்போம்.

download (16)

ஆனால் நபர் ஒருவர் கடந்த 2016-ஆம் ஆண்டு முழுவதும் உருளைக்கிழங்கை மட்டுமே சாப்பிட்டு வந்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?

ஆம், அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரு டெய்லர் என்பவர் தான் இதை செய்துள்ளார்.

சில மூலிகைகள், உப்பு, தக்காளி சாஸ், கூடவே விட்டமின் B12 என்று சிலவற்றை தன் உணவில் சேர்த்துக் கொண்டாலும் காலை, மாலை இரவு என்ற மூன்று வேளைக்கும் உருளைக்கிழங்கை மட்டுமே இவர் முக்கிய உணவாக எடுத்துக்கொண்டார்.

அந்த ஆண்டில் செய்யப்பட்ட 4 மருத்துவ பரிசோதனைகளில் ஆண்ட்ரு உடல்நிலை சமநிலையில் இருப்பதும், அவரின் உடல் எடை கணிசமாக குறைத்திருந்ததும் தெரியவந்தது.

ஆண்டுமுழுக்க ஆண்ட்ரு புத்துணர்ச்சியோடு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு மனிதனும் உயிர்வாழ 20 அமினோ அமிலங்கள் தேவை என்ற நிலையில், இதுமாதிரி ஒரே வகையான உணவை மட்டும் உண்ணுவது சரியானாதா என்றால் நிச்சயமாக இல்லை.

அரிசி, தயிர், காய்கறிகள், நெய், நட்ஸ் என்று எல்லாவற்றையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நம் உணவுகளில் சேர்த்துக் கொள்ளுகிறோம்.

இவை உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை பெரும்பாலும் சமன்செய்துவிடும்.

ஆனால் ஒற்றை உணவு முறையில் உடலுக்குத் தேவையான இவை எல்லாமும் நிச்சயமாக நமக்கு கிடைக்கவே கிடைக்காது.

ஆண்ட்ருவுக்கு இந்தச் சோதனையை வெற்றிகரமாக முடிந்தாலும், எல்லா மனிதர்களுக்கும் இது சாத்தியப்பட வாய்ப்பில்லை.