திருநங்கைகளால், திருநங்கைகளைப் பற்றி இணையத்தில் ஒரு யூ டியூப் சேனல்!!

இணையத்தில் பல யூடியூப் சேனல்கள் இருக்கின்றன. இது கொஞ்சம் வித்தியாசமான யு டியூப் சேனல். ஏனெனில், இந்த சேனலை எழுதி, இயக்கி வழங்குவது திருநங்கைகள்.

1492262183

திருநங்கைகளைப் பற்றி பல கற்பிதங்கள், தவறான தகவல்கள் இந்தியாவில் நிலவுகின்றன என்று சொல்லும் ஹைதராபாத்தைச் சேர்ந்த திருநங்கைகள் குழு ஒன்று, இவற்றை மாற்றி உண்மைத் தகவல்களைப் பறிமாறிக்கொள்வதற்காக இந்தச் சேனலைத் தொடங்கியுள்ளதாகக் கூறுகிறது.