திருமணமான புதுப் பெண் துாக்கிட்டு தற்கொலை!! உடலைக் கூட பார்க்க வராத கணவன்.

ஈரோடு மாவட்டத்தில் திருமணமான புதுப் பெண் ஒருவர் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

tharkolai

இந்த சம்பவம் தொடர்பில் உண்மையை கண்டறிவதாக பொலிஸார் வாக்களித்த பின்னரே உறவினர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 19 வயதுடைய இந்தப் பெண் நேற்று முன்தினம் இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

குறித்த பெண்ணுக்கும் 21 வயதுடைய அவரது உறவினர் மகனுக்கும் காதல் இருந்துள்ள நிலையில் கடந்த ஜீன் மாதம் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர்.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு குறித்த பெண்ணை அவரது தாயின் வீட்டில் விட்டுச்சென்றுள்ள நிலையில் அவர் இவ்வாறு துாக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதணைக்காக அனுப்பி வைத்த நிலையில் குறித்த வைத்தியசாலையின் முன்பு அவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

அத்தோடு பெண் உயிரிழந்தது குறித்து அவரது கணவருக்கு அறிவித்திருந்தும் அவர் தனது மனைவியின் உடலைக் கூட பார்க்க வரவில்லை என கூறுகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.