கண்டியில், தாத்தா உறவு முறை­யான 50 வயது வயோ­திபர் 11 வய­தான சிறு­மி மீது பாலியல் துஷ்பிரயோகம்!!

11 வயதுடைய சிறு­மியை மூன்று சந்­தர்ப்­பங்­களில் பாலியல் குற்­றத்­திற்­குட்­ப­டுத்­திய 50 வயதுடைய நபருக்கு 24 மாத கடூ­ழியச் சிறைத் தண்­டனை விதித்த கண்டி மேல் நீதி­மன்ற நீதிவான் தீர்ப்பிட்டார்.

rape_story_144409945026_647x404_100615081113_052017101728

இதேவேளை, பாதிக்­கப்­பட்ட சிறு­மிக்கு 75,000 ரூபா நஷ்­ட­ஈ­டா­கவும் வழங்குமாறும் குற்றவாளிக்கு நீதிவான் உத்­த­ர­விட்டார்.

கண்­டி, தென்­னங்­கும்­புர பிர­தே­சத்தைச் சேர்ந்த 50 வயது வயோ­திபர் ஒரு­வ­ருக்கே நீதிவான் இவ்­வாறு தண்­டனை விதித்தார்.

வீட்டில் ஒரு­வரும் இல்­லாத வேளை­களில் தாத்தா உறவு முறை­யான 50 வயது வயோ­திபர் 11 வய­தான குறித்த சிறு­மி மீது மூன்று சந்­தர்ப்­பங்­களில் பாலியல் குற்றம் புரிந்­துள்ளார்.

இச் சம்­பவம் சிறு­மியின் பெற்றோருக்கு தெரி­ய­வ­ரவே அவர்கள் உட­ன­டி­யாக கண்டி பொலிஸ் பிரிவில் பெண்கள் மற்றும் சிறுவர் பாது­காப்பு பொலி­ஸா­ருக்கு முறைப்­பாடு செய்­திருந்தமை குறிப்பிடத்தக்கது.