கொட்டாஞ்சேனை – அளுத்மாவத்தை – ஹேட்டியாவத்தையில் இருந்து ராமநாதன் மாவத்தை வரையான போக்குவரத்து நடவடிக்கை நாளை முதல் இரவு வேளைகளில் கட்டுப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த பகுதியில் நீர் குழாய் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளமை இதற்கு காரணமாகும்.
இதனால் குறித்த நாட்களில் இரவு 9.00 மணி முதல் காலை 5.00 மணிவவரை போக்குவரத்து நடவடிக்கை கட்டுப்படுத்தப்படவுள்ளது.
இதனால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவல்துறை, சாரதிகளிடம் கோரியுள்ளது.