புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையத் தவறிய மாணவன் ஒருவன் கடுமையான முறையில் அவனது தாயாரால் தாக்கப்பட்டுள்ளனான். யாழ் நல்லுார்ப் பகுதியில் இச் சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளது.
புலமைப் பரிசில் பரீட்சையில் குறித்த மாணவன் 153 புள்ளிகள் பெற்றுள்ளான். இருந்தும் அவனுக்கு பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளி கிடைக்கவில்லை. நேற்று இரவு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகி சிறிது நேரத்தில் தனது மகனுக்கு 153 புள்ளிகள் கிடைத்ததாக அயல் வீடுகளுக்கு குறித்த தாயார் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் இன்று காலை யாழ்ப்பாணத்துக்கான வெட்டுப் புள்ளிகளின் விபரம் வெளியாகிய பின்னர் தனது மகன் சித்தியடையவில்லை என்று அறிந்துள்ளார். அதன் பின்னர் மகனை குறித்த தாயார் கடுமையாகத் தாக்கியதாகவும் அயல்வீட்டவர்கள் மாணவனைத் தாக்குவததை தடுத்து நிறுத்தியதாகவும் தெரியவருகின்றது.
மாணவனின் தந்தை 2008ம் ஆண்டு தொடக்கப் பகுதியில் காணாமல் போய் விட்டார். இதன் பின்னர் குறித்த மாணவனையும் அவனது சகோதரிகள் இருவரையும் குறித்த பெண் மிகவும் சிரமப்பட்டு வளர்த்து வந்ததாகவும் இரு சகோதரிகளும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து வேம்படி மகளீர் கல்லுாரியில் பயில்வதாகவும் குறித்த பெண்ணின் வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெண்ணால் தாக்கப்பட்ட மாணவன் தற்போது அயலவர்களின் உதவியுடன் பாட்டி வீட்டில் தங்கியிருப்பதாக தெரியவருகின்றது.