முதல் முறையாக ஆண்கள் கிரிக்கெட்டில் களமிறங்கும் பெண் நடுவர்.!!!

ஆண்கள் கிரிக்கெட் போட்டிக்கு முதல் முறையாக பெண் ஒருவர் நடுவராக களமிறங்குகிறார்.

 

india-australia-cricket

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் கிளைர். 28 வயதான இவர், அங்கு நடைபெற்ற பெண்கள் உலக கோப்பை போட்டிக்கு நடுவராக இருந்துள்ளார்.

தற்போது, ஆஸ்திரேலிய ஆண்கள் பிரிவு லெவன் அணியுடன், இங்கிலாந்து உள்ளூர் அணி விளையாட உள்ளது.

இந்த போட்டிக்கு, நடுவராக கிளைர் செயல்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் நடுவர் தேர்வில் வெற்றி பெற்ற இவருக்கு, கிரிக்கெட் விளையாட தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.