தமிழகத்தின் புதிய ஆளுநராக, பன்வாரிலால் பரோஹித் பதிவியேற்பு!!

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவை விடுவித்து, மேகாலாயா ஆளுநராக இருந்த பன்வாரிலால் பரோஹித்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் நியமனம் செய்தார்.

banwarilal-purohit-759-750x506

அதனைத் தொடர்ந்து பன்வாரிலால் புரோஹித் நேற்று சென்னை வந்தார்.

அவருக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், இன்று காலை 9.30 மணிக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அதன்படி தமிழகத்தின் 25-வது ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பொறுப்பேற்றுக்கொண்டார்.

அவருக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.