வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் சமீரா ரெட்டி..நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது
எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் வராததால் கல்யாணம் செய்துகொள்ள முடிவு செய்தார் சமீரா ரெட்டி. தொழில் அதிபர் அக்ஷய் வர்தே என்பவரை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
ஒரு குழந்தைக்கு தாய் ஆன நிலையில் நடிப்புக்கு குட்பாய் சொன்னார். தற்போது சினிமாவிலிருந்து ஒதுங்கி வாழ்ந்துவரும் சமீரா, வைரலாகும் போட்டோவால் புதிய சிக்கலில் சிக்கி இருக்கிறார்.
வங்கிக் கடன் வாங்கிய விவகாரம் தொடர்பாக தொழில் அதிபர் விஜய் மல்லையா மீது வழக்கு நடந்து வருகிறது என்பது ஊருக்கே தெரியும்.
இந்நிலையில் விஜய் மல்லையா, சமீரா ரெட்டிபற்றி ஒரு தகவல் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது..
சமீரா திருமணத்துக்கு விஜய் மல்லையா நேரில் சென்று வாழ்த்தினார். சமீரா குடும்பத்தினரும் மல்லையா குடும்பத்தினரும் நெருங்கிய நட்புடன் பழகி வருகின்றனர் என்பது குறிபிடத்தக்கது..
இந்நிலையில் திருமணத்தன்று, தந்தை ஸ்தானத்திலிருந்து சமீராவை கன்னியாதானம் செய்துகொடுக்கும் சம்பிரதாயத்தை மல்லையாதான் செய்தாராம் அந்த அளவுக்கு குடும்ப நண்பர்..
வைரலாகும் இந்த போட்டோ தான் சமீராவை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது. இது பட வாய்ப்பை பெற்றுத்தருமா? சிக்கலில் சிக்க வைக்குமா? என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கின்றனர்