உடல் அழுகிய நிலையில், எலும்புகூடாக தந்தை, அதிர்ச்சி அடைந்த மகள்!

திருவனந்தபுரத்தில் வசித்து வந்தவர் ராதாகிருஷ்ணன் 70 வயதாகும் இவர் சில கருத்து வேறுபாடுகளால் தன்னுடைய மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இவரது மகள் பல் மருத்துவர் கோட்டயத்தில் கணவருடன் வசித்து வருகிறார். தந்தையுடன் மகள் அடிக்கடி போனில் பேசுவாராம். ஆனால், கடந்த சில தினங்களாக மகள் தந்தையுடன் போனில் பேசவில்லை என்று தெரிகிறது.
The-human-body-is-made-to-keep-the-wizards-plea-to-arrest-mantirikam-4
இந்நிலையில், திடீரென கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தந்தையை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் தந்தையின் தொலைபேசி அணைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் தந்தை தங்கியிருந்த வீட்டுக்கு நேரில் சென்றார். அப்போது, வீடு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது.
ஜன்னல் வழியே பார்த்த போது செய்தித்தாள்கள் போட்டது போட்டப்படி அப்படியே இருப்பது தெரிய வந்தது. உடனே பயந்து மகள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலையடுத்து விரைந்து சென்ற போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சோபாவில் ராதாகிருஷ்ணன் உடல் அழுகிய நிலையில், எலும்புகூடாக இறந்து கிடந்துள்ளார்.
இதனை பார்த்த மகள் மிகவும் அதிர்ச்சியடைந்து சம்பவ இடத்திலேயே மயக்கம் அடைந்தார். போலீசார் விசாரித்ததில் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு செய்தித்தாள்கள் எதுவும் இல்லை; காலண்டரில் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு தேதியும் கிழிக்கப்படவில்லை என்பதை கண்டுபிடித்தனர்.
எனவே, ஏப்ரல் மாதமே ராதாகிருஷ்ணன் உடல் நலக்குறைவால் இறந்து இருக்கலாம் என்று தெரிவித்தனர். இதனையடுத்து பிரேத பரிசோதனைக்கு பிறகு, ராதாகிருஷ்ணனின் உடல், அவரின் மகளிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பெற்றுக்கொண்ட மகள் கதறி கதறி அழுத சம்பவம் பார்வையாளர்களையும் கண்கலங்க செய்துள்ளது.