தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரான திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை தமிழக மக்கள் மட்டுமல்ல உலகில் சமாதானத்தை விரும்பும் எவராலும் மறக்கமுடியாது. மேலும் தமிழ் பேசக்கூடிய அனைவரது மனதிலும் நீங்கா சுவடாக வாழ்ந்து வருகின்றார்.
எந்த துறையிலும் சிறிதாக பிரபலம் ஆனாலும் அல்லது மதிக்கத்தக்க மனிதராக சமூகத்தில் மாறினாலும் தனக்கான நிகழ்ச்சியில் ஆடம்பரத்தை விரும்பும் மனிதர்களிடத்தில், இவரது திருமணம் மிக எளிமையாக நடந்தது இந்த மாதத்தில் நினைவு கூறுகிறது.
அக்டோபர் 1, 1984 அன்று பிரபாகரன் – மதிவதினி அவர்களின் திருமணம் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் உள்ள முருகன் கோயிலில் குறைவான நபர்கள் மத்தியில் நடந்துள்ளது. இதில் பழ. நெடுமாறன் அவர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.