தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி உயிரிழந்த இளைஞன்!!

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி புதன் கிழமை(4) இரவு பயணித்த புகையிரதத்தில் மோதி உயிரிழந்த இளைஞனின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த சடலம் இது வரை அடையாளம் காணப்படவில்லை என மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Capture789
கடந்த புதன் கிழமை(4) இரவு தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் இரவு 10.15 மணியளவில் தாரபுரம் பகுதியில் உள்ள 312 ஆவது மைக்கல் தொலைவில் உள்ள காங்கியடி சிறி முத்துமாரி ஆலயத்திற்கு தொலைவில் இளைஞர் ஒருவர் புகையிரத்தில் மோதி உயிரிழந்தார்.
குறித்த இளைஞனின் சடலம் உடனடியாக மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை.
சுமார் 25 வயது மதிக்கத்தக்க குறித்த இளைஞன் நீல நிற டெனிம்ஸ் ஜீன்ஸ் மற்றும்,கறுப்பு நிற செக் சேட் அணிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சடலம் இது வரையில் அடையாளம் காணப்படாத நிலையில் மன்னார் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.