இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, அணுஆயுதங்களை அழிப்பதற்கான அனைத்துலகப் பரப்புரை அமைப்புக்கு வழங்கப்படுவதாக ஒஸ்லோவில் நோபல் பரிசுக் குழு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதிலும் உள்ள 1000 நாடுகளின் அரசசார்பற்ற அமைப்புகளின் கூட்டணியே அணுஆயுதங்களை அழிப்பதற்கான அனைத்துலகப் பரப்புரை அமைப்பாகும்.
உலகில் இருந்து அணு ஆயுங்களை இல்லாமல் செய்வதற்கான பரப்புரைகளிலும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருவதைக் கௌரவிக்கும் வகையில் இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இந்த அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட கடும் போட்டியாளர்கள் இருந்த நிலையில், அணுஆயுதங்களை அழிப்பதற்கான அனைத்துலகப் பரப்புரை அமைப்பு இந்த மதிப்பு மிக்க பரிசை வென்றுள்ளது.