வடகொரியா அணு ஆயுத தாக்குதலில் ஈடுபட்டால், ‘சியோல் மற்றும் டோக்கியோ நகரங்களில் உள்ள சுமார் 2 லட்சம் மக்கள் கொல்லப்படலாம் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதனோடு, சுமார் 7 லட்சம் மக்கள் படுகாயமடைய வாய்ப்பு உள்ளதாகவும் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போதைய சூழலில், வடகொரியாவிடம் இருக்கும் அணு ஆயுதங்களால் தென் கொரியா மற்றும் ஜப்பான் நாட்டில் உள்ள இரண்டு நகரங்கள் கடுமையாக பாதிக்கப்படலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
கொரிய தீபகற்பத்தில் நாளுக்கு நாள் போர் சூழல் அதிகரித்துள்ளது. அதனோடு, அமெரிக்காவின் நெருக்கடிக்கும் பணியாத கிம் ஜோங் வுன், கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளார்.
இதன் மூலம், உலக நாடுகளை தன்பக்கம் திரும்ப வைத்துள்ளது வடகொரியா.
மேலும், வடகொரியாவிடம் எந்த அளவுக்கு அணு ஆயுதங்கள் உள்ளது என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை.
இதனால், கிம் ஜோங் வுன் எந்த அளவுக்கு, எதிரி நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவார் என்பதை கணிக்க முடியவில்லை என்று பாதுகாப்பு நிபுணர்கள் ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.