இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளாதாரப் போட்டி, இலங்கை வீதிகளில் இன்று எதிரொலித்தது.
இலங்கையின் மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு குத்தகைக்கு கொடுப்பதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் மூன்று காவல்துறையினருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக இருபத்தி எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.