டொராண்டோவின் களவில் இயங்கும் சூதாட்டக் கிடங்கொன்றில், மோசமான கைகலப்பு!

கடந்த மாதம் டொராண்டோவின் நோர்த் யோர்க் பிராந்தியத்தில் தந்தையையும் மகனையும் கடத்தி , ஒரு களவில் இயங்கும் சூதாட்டக் கிடங்கொன்றில் வைத்த கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பாக ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருபதோடு , இன்னும் மூவரை பொலிசார் தேடி வருகிறார்கள்.

3277255

இந்தக் கொடூரமான தாக்குதலின் விளைவாக , தந்தைக்கு மூளையிலிருந்து இரத்தக் கசிவு ஏற்பட்டு உயிராபத்தான நிலையில் மருத்வமனையில்சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த மாதம் 18ந் திகதி 52 வயதான தந்தையும் , 27 வயதான மகனும் , நிலவறைக்குள் நுழைந்தபோது பலமாகத் தாக்கப்பட்டுள்ளார்கள் . பின்பு தந்தையை வெளியே விரட்டி இருக்கிறார்கள் . கையில் ஒரு நீண்ட கத்தியுடன் , மகனை மீட்டுக்கொண்டு செல்ல , தந்தை திரும்பவும் அதே இடத்துக்கு வந்துள்ளார்.

முன்பு தாக்கியவர்கள் , கத்தியை எப்படியோ இவரிடமிருந்து பறித்து , அதே கத்தியால் இவரைத் தாக்கி இருக்கிறார்கள் . மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தந்தை இடையிடையே கண்களைத் திறந்து பார்த்தாலும் , எவருடனும் பேசமுடியாத நிலையில் இருப்பதாக பொலிசார் கூறுகின்றனர் .

28 வயதான அஜெக்ஸ் என்பவனை பொலிசார் சந்தேகத்தில் கைதுசெய்துள்ளர்கள் என்றும் இன்னும் இருவரைத் தேடி வருவதாகவும் கூறி இருக்கிறார்கள் . பாதாள அறையில் சூதாடுவதுக்கு அவசியமான பலவற்றைக் கண்டுள்ளதாக பொலிசார் கூறி இருக்கிறார்கள்