நீதிமன்றத்தை ஏமாற்றினாரா தனுஷ்?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் தன்னுடைய மகன் என்று மேலூரைச் சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதி பல வருடங்களாக வழக்கு தொடர்ந்து வருகின்றனர்.

_95264463_2

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஆவணங்களை சமர்பித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனுஷ் மனு செய்தார்.

ஆனால் இந்த ஆவணங்கள் போலி என கதிரேசன் புகார் அளித்துள்ளார்.

அதில், சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் 1983 ஜுலை 28ல் கிருஷ்ணமூர்த்தி, விஜயலட்சுமிக்கு பிறந்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த அந்த தேதியில் பிறந்ததாக எந்த பதிவும் மாநகராட்சியில் இல்லை. போலி கையெழுத்து, முத்திரையிட்டு ஆவணங்களை கொடுத்துள்ளனர்.

வேறு ஒருவரின் பள்ளி மாற்றுசசான்றிதழில் உள்ள விபரங்களை மாற்றி தனுஷ் பெயருக்கு மாற்றியுள்ளனர். ரேஷன் கார்டு, ஆதார் கார்டு என அனைத்துமே போலி என்று குறிப்பிட்டுள்ளார்.

உடலிலிருந்த மச்சத்தையும் லேசர் மூலம் அகற்றியுள்ளனர். இதற்கு மதுரை மருத்துவக் கல்லூரியின் டீன் நீதின்றத்திலேயே சான்று அளித்துள்ளார்.

எனவே தனுஷ் மீது வழக்கு பதிந்து ஆவணங்களை சரிபார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.