இந்தியாவின் உத்திரபிரதேசத்தில் பெண் ஒருவர் தன்னை பலாத்காரம் செய்ய முயன்றவரின் காதினை கடித்து அந்த காதோடு பொலிஸ் நிலயத்திற்குச் சென்று பொலிசில் புகார் அளித்துள்ளார்.
உத்திரபிரதேசத்தின் டவுட்டாலி கிராமத்தைச் சேர்ந்த திருமணமான பெண் தனது கணவன் மற்றும் குழந்தைகளுடன்வசித்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று நான்கு பேர் கொண்ட கும்பல் இவர்களது வீட்டிற்குள் நுழைந்து அப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளனர்.
இதனைத் தடுக்க முயன்ற கணவனையும் இக் கும்பல் தாக்கியுள்ளது. இதில் அப்பெண் அந்த கும்பலோடு சண்டையிட்டபோது, அந்த கும்பலின் ஒருவரது காதினை கடித்து எடுத்துள்ளார்.
அதன் பின்னர் அந்த காதோடு பொலிஸ் நிலயத்திற்குச் சென்று புகார் கொடுத்துள்ளார். ஆனால் பொலிசார் அந்த புகாரை வாங்க மறுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட பொலிஸ் அதிகாரியை சந்தித்து, துண்டான காதுடன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரை ஏற்றுக்கொண்ட எஸ்பி, இந்த குற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.