நபர் ஒருவர் தனது இரு பிள்ளைகளை சுமந்துகொண்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை! நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி!

நபர் ஒருவர் தனது இரு பிள்ளைகளை சுமந்துகொண்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவத்தை 20 க்கும் மேற்பட்டவர்கள் நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 suicide
வியாழக்கிழமை, பரிசின் 11 ஆம் வட்டாரத்தின் Rue des Boulets இல் உள்ள உணவக கட்டிடம் ஒன்றில் இருந்து குறித்த நபர் தன் பிள்ளைகளோடு குதித்துள்ளார். நண்பகலுக்கு பின்னர், 2 மணி அளவில், குறித்த நபர் 5 வது தளத்தில் இருந்து 6 வயது மகள்,  மற்றும் மூன்று வயது பிள்ளையையும் இரு கைகளில் பிடித்துக்கொண்டு குதித்துள்ளார். இதில் தந்தையும் மூத்த மகளும் சம்பவ இடத்தில் உயிரிழக்க, 3 வயது பிள்ளை, மரத்தில் உடை சிக்கிக்கொண்டு அதிஷ்ட்டவசமாக உயிர் பிழைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை 20க்கும் மேற்பட்டவர்கள் நேரடியாக பார்த்துகொண்டிருந்துள்ளனர். ஜன்னலில் மூவரும் நிற்பதை எதுவும் செய்யமுடியாத நிலையில் பார்வையிட்டதாக அவர்களில் பலர் குறிபிட்டுள்ளனர். தவிர அவர்களில் பெரிய பிள்ளை, குதிப்பதற்கு பயந்தும், தயாராக இல்லை எனவும் நேரில் கண்டவர்கள் சாட்சியம் அளித்துள்ளனர்.