பொலிஸ் அதிகாரிகள் என கூறி வைத்தியரை கடத்திய 5 பேர் குருந்துவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊழல் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரிகள் என தம்மை அடையாளப்படுத்திய சந்தேக நபர்கள் வைத்தியரை கடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்தியரின் தங்க மோதிரம் மற்றும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பணத்தை பலவந்தமாக பெற்றுக் கொள்ள முயற்சித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களில் இரு பெண்களும் அடங்குதவாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அண்மைக்காலமாக கொள்ளைச் சம்பவங்களில் பெண்கள் அதிகம் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் புதுக்கடை இலக்கம் ஒன்று நீதவான் நீதமன்றத்தில் இன்றைய தினம் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.